Cine Bits
சிங்கப்பூர் உணவகத்தில் ஸ்ரீதேவியின் பொம்மை..
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு திரையுலகினர், ரசிகர்கள், வெளிநாட்டு ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து அவரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இணையதளத்தில் அவரது திரையுலக சாதனைகளை புகழ்ந்து கருத்துக்கள் பதிவிடுகிறார்கள். இந்த நிலையில் சிங்கப்பூரில் உள்ள உணவகத்தில் அவரின் உருவத்தில் பொம்மை செய்து அதற்கு பட்டு புடவை நகைகள் அணிவித்து வைத்து இருக்கிறார்கள். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.