Cine Bits
‘சிங்கம் 3’ ரிலீஸ் தேதி மாற்றம்

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சிங்கம் 3' திரைப்படம் வரும் 23ஆம் தேதி வெளிவரும் என்ற செய்தி வெளிவந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வரதா புயலால் ஏற்பட்ட பாதிப்பால் சென்னை உள்பட வட தமிழக மக்கள் படும் துன்பம் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என தெரிகிறது.
இருப்பினும் 'சிங்கம் 3' படத்தின் சென்சாருக்கு பின்னரே உறுதியான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்கப்படுகிறது.