சினிமாவிலும், நிஜ வாழ்க்கையிலும் நான் சம்மந்தப்பட்ட விஷயங்களை நானே முடிவுசெய்கிறேன் – ராகுல் ப்ரீத் சிங் !

நிஜ வாழ்க்கையில் யாரும் யாருக்கும் கருத்து சொல்லவோ, அறிவுரை வழங்கவோ முடியாது. அப்படியே சொன்னாலும் அது பிடிக்காது. எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் தெரியும். எனவே சினிமா மூலம் இப்போது எந்த கருத்தையும் சொல்ல தேவை இல்லை. இப்போதைய தலைமுறையினருக்கு சரியான வழி தெரியும், வாழ்க்கையை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்ற பக்குவமும், அறிவும் அவர்களுக்கு இருக்கிறது. அவரவர் வாழ்க்கையை சரியான வழியில் கொண்டு செல்லவும் அவர்களுக்கு தெரியும். வேகமாக யோசிக்கிறார்கள். ஏதாவது சொன்னாலும் கூட ஏளனமாக பார்ப்பார்கள். இதனால் எனது சினேகிதிகளுக்கு கூட நான் அறிவுரை சொல்வது இல்லை. அவரவர் வாழ்க்கை அவரவர்களுடையது. அவர்கள் எடுக்கிற முடிவு நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் அவர்களே பொறுப்பு. என் சினேகிதிகளுடன் எந்த பிரச்சினையும் வராமல் இருப்பதற்கு அறிவுரை சொல்லாமல் இருப்பதும் காரணம். சினிமாவானாலும், நிஜ வாழ்க்கையாக இருந்தாலும் எனது சம்பந்தப்பட்ட முடிவுகளை நானே எடுக்கிறேன் இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.