சினிமாவில் எனக்கு போட்டியில்லை – ஜீவா!

ஜீவா நடித்துள்ள புதிய படம் ‘கொரில்லா.’ இந்த படத்தை டான் சாண்டி இயக்கி உள்ளார். விஜய் ராகவேந்திரா தயாரித்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் ஜீவா கலந்து கொண்டு பேசிய தாவது:- கொரில்லா படத்தில் குரங்குடன் நடித்தது நல்ல அனுபவம். இந்த குரங்கு ஆங்கில படத்தில் நடித்துள்ளது. குரங்குக்காகவே படப்பிடிப்பை தாய்லாந்தில் நடத்தினோம். குரங்கு என்னுடன் நட்பாகி விட்டது. கொரில்லா மாதிரி ஒரு படத்தில் நடிப்பேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. இப்படி ஜாலியாக ஒரு படம் பண்ணி ரொம்ப நாட்களாகி விட்டது. எனக்கு சினிமாவில் யாரும் போட்டி இல்லை, அது எனக்கு பெரியபலம் என கூறினார்.