சினிமாவில் சம்பாதித்தை சினிமாவில் போடும் பார்த்திபன் – சமுத்திரக்கனி !
தமிழ்சினிமாவில் உள்ள முக்கியமாக நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன். இவர் இயக்கிய படங்கள் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுப்பதாக இருக்கும். தற்போது அவர் தயாரித்து இயக்கி நடித்துள்ள படம் 'ஒத்த செருப்பு சைஸ் 7 ' என்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சமுத்திரகனி கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது, பார்த்திபனுடன் நிறைய பேசிக்கொண்டிருப்பது வழக்கம். நேரில் சந்தித்து பல விஷயங்களை விவாதிப்பேன். பல படங்களில் நடித்து சம்பாதிப்பார் அவர் . அந்த பணத்தை எல்லம் வைத்து தரமான படங்களை தயாரித்து இயக்குவதன் மூலம் மக்களுடன் பெற்றதை மக்களிடமே கொடுத்துவிடுவார். மக்களுக்கு தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்ற அவரது வேட்கை எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. தற்போது அவர் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.