சினிமாவில் நடிக்க போவதில்லை நடிகை பிரியா பவானி ஷங்கர்- அதற்கு பதிலாக இதைத்தான் செய்ய போகிறாராம்

கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.இத்தொடருக்குப்பின் நடிக்க போவதில்லை எனக்கூறி வந்தவர் பின்பு வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்தார். அடுத்தடுத்து பலப் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்,இதற்கிடையில் சமூக வலைதளங்களில் புதிய புதிய புகைப்படங்களை போட்டு ரசிகர்களையும் ரசிக்க வைப்பார்.இப்போது அவர் குறித்து ருசிகர தகவல் ஒன்று பரவி வருகிறது, நாவல் ஒன்றை எழுதி வருகிறாராம், எழுதுவது முடிந்ததும் சினிமாவைத் தொடரப்போவதாக கூறியிருக்கிறார்.