சினிமாவில் நான் யாருக்கும் போட்டி இல்லை – விஜய் சேதுபதி!

ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டாலும் வில்லன், எதிர்மறை கதாபாத்திரங்கள் வந்தாலும் ஏற்று நடித்து, ஜொலித்தும் வருகிறார் விஜய்சேதுபதி. சூப்பர் டீலக்ஸ் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரமாக திருநங்கை வேடம் ஏற்று நடிக்கிறார். இப்படம் பற்றி அவர் கூறுகையில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம், அழகான கதை. இப்படத்தில் திருநங்கை வேடம் என்பதால் அதை ஏற்கவில்லை. வேடத்தின் முக்கியத்துவம் கருதியே ஏற்று நடித்தேன். திருநங்கையாக நடித்தபோது பெண்களின் மீதான மதிப்பு எனக்கு அதிகரித்தது. திருநங்கை கெட்டப்பில் வீட்டுக்கு வந்த என்னை பார்த்து என் மகள் ஸ்ரீஜா அழுதுவிட்டாள். சினிமாவில் நான் யாருக்கும் போட்டி இல்லை. இங்கு வந்தபோது வியாபாரம் நம் எண்ணத்தை மாற்றி விடுகிறது. பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும்.