சினிமாவில் மறுபிரவேசம் எடுக்கவிருக்கும் அஜித்தின் மைத்துனர் !

அஜித்தின் மைத்துனன் ரிச்சர்ட் காதல் வைரஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த படம் தோல்வியடைந்ததால் மற்ற பல படங்களில் நடித்திருந்தும் அவரால் வெற்றிநாயகனாக வலம்வர முடியவில்லை. அஜித்தின் மைத்துனனாகவே இருந்தாலும் எவ்வித சிபாரிசும் எதிர்பார்க்காமல் தன் சொந்த முயற்சியில் அடியெடுத்துவைக்கிறார். இறுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தமான்’ என்ற படத்தில் நடித்திருந்தார் ரிச்சர்ட். தற்போது மூன்று வருட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ளார் இடைவேளைக்கு படத்திற்கு ‘ திரௌபதி’என்று தலைப்பு வைத்துள்ளனர். பழைய வண்ணார பேட்டை படத்தை இயக்கிய மோகன் இந்த படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார் நடிகர் ரிச்சர்ட்.