சினிமாவில் மீண்டும் ஜனகராஜ்…

நடிகர் ஜனகராஜ் கடந்த 2005ல் பிரசாந்த், சினேகா நடிப்பில் வெளியான “ஆயுதம்” படத்தில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் நடிக்காமல்  இருந்தார். தற்போது அவரது உடல்நிலை தேறி உள்ளதால் மீண்டும் நடிக்க வருகிறார். சாருஹாசன் தாதா வேடத்தில் நடிக்கும் தாதா 87 படத்திலும், விஜய் சேதுபதியுடன் த்ரிஷா நடிக்கும் 96.படத்திலும், பாண்டியராஜன் மகன் பிருத்விராஜன் நடிக்கும் ஒபாமா படத்திலும் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிப்பது குறித்து பேசி கொண்டிருக்கிறார் என தெரிகிறது.