Cine Bits
சினிமாவில் ரீ-என்ட்ரி ஆகும் மேனகா

தமிழில் 1980ல் வெளியான ராமாயி வயசுக்கு வந்துட்டா என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷின் அம்மா நடிகை மேனகா. அதன்பிறகு பல படங்களில் நடித்தவர், மலையாளம், கன்னடம்,இந்தி என மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல், மலையாளத்தில் பல படங்களை தயாரித்திருக்கிறார்.
தற்போது மகள் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதால் அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.இந்நிலையில், ஐஎம்ஏ -என்றொரு குறும் படத்தில் பிரதாப் போத்தனுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தில் அழுத்தமான வேடத்தில் நடிக்கும் மேனகா, தனது நடிப்புக்கு கிடைக்கிற ரெஸ்பான்சைப் பொறுத்து அடுத்தபடியாக சினிமாவிலும் ஒரு ரவுண்டு வரலாம் என்று தீர்மானித்துள்ளாராம்.