சினிமாவில் வாய்ப்பில்லாமல் வெப் சீரிஸுக்கு மாறிய ஹன்சிகா !

பல நடிகைகள் வெப் சீரிஸில் நடித்து வரும் நிலையில் நடிகை ஹன்சிகாவும் வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோக்களுடன் ஜோடிபோட்டு வந்த ஹன்சிகாவுக்கு திடீரென்று திரையுலகில் வேகத்தில் தடை ஏற்பட்டது. அடிக்கடி திரையில் பார்த்து வந்த ஹன்சிகா முகத்தை எப்போதாவது பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தையடுத்து வெப் சீரிஸ் பக்கம் கவனத் தை திருப்பி இருப்பதுடன், முதன்முறையாக வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண் டிருக்கிறார் ஹன்சிகா. இதுபற்றி உறுதி செய்த ஹன்சிகா, ‘இன்னும் 4 நாள் பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. மற்றபடி வெப் சீரிஸ் ஷூட்டிங் முடிந்துவிட்டது. முதன்முறையாக வெப் சீரிஸில் நடித்திருப்பதால் அதை எப்படி ஏற்கப்போகிறார்களோ என்ற பதற்றம் அதிகரித்திருக்கிறது’ என்றார்.