சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் – நடிகர் தனுஷ் மகிழ்ச்சி !

தனுஷ் நடிகராகி 17 வருடங்கள் ஆகிறது. 2002-ல் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து முன்னணி நடிகராக உயர்ந்தார். வுண்டர்பார் பட நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளராகவும் மாறினார். ஒய் திஸ் கொலை வெறி பாடல் மூலம் பாடலாசிரியராகவும் வளர்ந்தார். இதற்கு நன்றி தெரிவித்து தனுஷ் வெளியிட்ட அறிக்கையில் துள்ளுவதோ இளமை படம் 2002 மே 10-ல் வெளியானது. என் வாழ்க்கையையே அந்த நாள் மாற்றிவிட்டது. அதற்குள் 17 வருடங்கள் ஆகிவிட்டது. அன்பு மட்டுமே உலகை உருவாக்குகிறது. நடிகராக தாக்குப்பிடிக்க முடியுமா என்ற நிலையில் இருந்த எனக்கு மனதில் இடம் அளித்து எனது வெற்றி தோல்வியில் அருகிலேயே இருந்த உங்களுக்கு எனது மனதின் ஆழத்தில் இருந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்  இவ்வாறு தனுஷ் கூறியுள்ளார்.