சினிமாவை விட்டு பிரியா வாரியர் விலகலா?

ஒரு அடார் லவ்’ படத்தின் பாடல் காட்சியில் கண் சிமிட்டி இந்தியா முழுவதும் பிரபலமான பிரியா வாரியருக்கு அந்த படம் கைகொடுக்கவில்லை. கண் சிமிட்டல் பிரபலமானதால் பிரியா வாரியருக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி தயாரிப்பாளர் வற்புறுத்தி கதையை மாற்ற வைத்தார் என்று படத்தின் இயக்குனர் உமர் லூலூ குறை கூறினார். இதற்கு இன்ஸ்டாகிராமில் பதில் அளித்த பிரியா வாரியர், நான் உண்மையை பேச ஆரம்பித்தால் சிலர் பிரச்சினையில் சிக்குவார்கள். அவர்களை போல் நானும் இருக்க கூடாது என்று அமைதி காத்து வருகிறேன். அவர்களை கர்மா கவனித்துக் கொள்ளும் என்றார். இந்த நிலையில் பிரியா வாரியரை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்கள். இதனால் வருத்தத்தில் இருக்கும் பிரியா வாரியர் சினிமாவை விட்டு விலகலாமா என்று யோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.