சின்னத்திரைக்கு வரும் நயன்தாரா! பிரபல தொலைக்காட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

நடிகை நயன்தாரா தான் தற்போதைக்கு தமிழ் சினிமாவில் பல டாப் ஹீரோக்களுடன் நடித்து வரும் நம்பர் 1 நடிகை. அவர் விஸ்வாசம் படத்திற்கு பிறகு விஜய்63 மற்றும் தர்பார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நயன்தாரா சின்னத்திரைக்கு வரவுள்ளதாக கூறி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் என்ன நிகழ்ச்சி என்பது பற்றிய விவரம் எதுவும் வராததால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.