Cine Bits
சிபிராஜின் ‘வால்டர்’ தலைப்பு சிக்கல் முடிவுக்கு வந்தது !

சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘வால்டர்’. சிபிராஜின் தந்தை சத்யராஜின் வாழ்க்கையில் மறக்கமுடியாத கதாபாத்திரம் வால்டர் வெற்றிவேல். அதன் முக்கியத்துவம் கருதியே சிபிராஜ் படத்துக்கு வால்டர் என்று பெயரிடப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக வால்டர் தலைப்பு தொடர்பாக சில சிக்கல்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அந்த பெயரில் படம் எடுக்க தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளதாகவும் வால்டர் தலைப்பு தனக்குத்தான் சொந்தம் என்றும் கூறி தயாரிப்பாளர் சிங்காரவேலன் நோட்டீஸ் அனுப்பினார். இதனால் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. தற்போது இருதரப்பினருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளது. தலைப்பு சிபிராஜ் படக்குழுவினருக்கு வழங்கப்பட்டு உள்ளது.