சிபிராஜுக்கு ஜோடியாகும் ஆண்ட்ரியா, அதுல்யா!

கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான மதுபானக்கடை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கமலக்கண்ணன். அந்தப் படத்திற்கு பிறகு வேறு எந்த திரைப்படத்தையும் இயக்காத கமலக்கண்ணன், தற்போது ஏழு வருடங்களுக்கு பிறகு நடிகர் சிபிராஜை வைத்து திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சிபிராஜ் நடிப்பில் கமலக்கண்ணன் இயக்கும் புதுப்படத்தில் கதாநாயகிகளாக ஆண்ட்ரியா மற்றும் அதுல்யா ரவி ஆகிய இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர்.