சிபிராஜ் படத்தில் இணைந்த கெளதம் வாசுதேவ் மேனன் !

நடிகர் சிபிராஜ் அறிமுக இயக்குநர் அன்பு இயக்கத்தில் வால்டர் என்றொரு படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஷிரின் கான்ச்வாலா நடிக்கிறார். காவல்துறை அதிகாரியாக சிபிராஜ் நடிக்கும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது இந்த படத்தில் இயக்குநர் கௌதம் மேனனும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்கள் வெளியாவதில் சிக்கல் நீடிப்பதால் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.