சிம்பன்சி குரங்கு ஒன்றுடன் நடிகர் ஜீவா இணைந்து நடித்த ‘கொரில்லா’படம் திரைக்கு வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திரைப்படங்களில் விலங்குகளைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பீட்டா அமைப்பு இப்பட ரிலீசுக்கு குறுக்கே பெரும்பொருட்செலவில் தயாராகி ரிலீஸை நோக்கிக் காத்திருக்கும் இப்படத்தில் இந்த சிம்பன்சிக்கு மட்டும் தினம் ஒன்றுக்கு ரூ 2 லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நிலைமை இப்படியிருக்க சிம்பன்சியைத் திரைப்படத்தில் நடிக்க வைத்ததற்கு சர்வதேச விலங்குகள் நல அமைப்பான பீட்டா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, நிஜ சிம்பன்சியைத் திரைப்படத்தில் நடிக்க வைக்க வேண்டாம் எனவும், அதற்குப் பதிலாக கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள் என்றும் பீட்டா இந்தியா அமைப்பு படக்குழுவினரை அறிவுறுத்தியிருந்ததாகவும் சிம்பன்சி குரங்கு ஒன்றுடன் நடிகர் ஜீவா இணைந்து நடித்த ‘கொரில்லா’படம் திரைக்கு வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெரிகிறது. ’கொரில்லா’படத்தை பீட்டா அமைப்பு இவ்வளவு மூர்க்கமாக எதிர்த்திருக்கும் நிலையில் அப்பட ரிலீஸ் அவ்வளவு எளிதில் நடக்காது என்று தெரிகிறது. ஏனெனில் இந்த பீட்டா அமைப்பு ஒரு சிம்பன்சிக்குக் காட்டும் சிம்பதியை தயாரிப்பாளர்கள் மீது காட்ட முன்வருவதே இல்லை.