சிம்புவின் அஸ்வின் தாத்தா போஸ்டர் ரிலீஸ்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ள​ படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். ஒவ்வொரு கெட்டப்புக்காகவும் கடினமாக உழைத்து வரும் சிம்புவின் மதுரை மைக்கேல் கெட்டப்பின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கெட்டப்பை அடுத்து தற்போது 60 வயது அஸ்வின் தாத்தாவாக நடிக்கும் சிம்புவின் கெட்டப் வெளியாகியுள்ளது.