Cine Bits
சிம்புவின் ‛ஏஏஏ’ படத்திற்கு வந்த சோதனை

சிம்பு படம் என்றாலே பிரச்னையில்லாமல் வெளிவராது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.அதேபோல் தற்போது சிம்பு நடிக்கும் “அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ” படத்திற்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.இப்படத்தில் சிம்பு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது.
இந்நிலையில், சிம்பு படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ரூ.25 லட்சம் தரவில்லை என பைனான்சியர் ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், பணத்தை திரும்பித் தரும் வரை சிம்பு படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.