சிம்புவின் ‘மாநாடு’ படம் கைவிடப்படவில்லை – தயாரிப்பாளர் விளக்கம்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் அவர் நடிப்பார் என்றும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3-ந்தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை பட வேலைகள் தொடங்கவில்லை. சிம்புவுடன் நடிக்கும் இதர நடிகர்-நடிகைகள் பற்றிய விவரமும் வெளியாகவில்லை. இதனால் மாநாடு படம் கைவிடப்பட்டு விட்டதாக தகவல் பரவியது. இந்த படத்துக்கு பதிலாக வேறு படத்தில் நடிக்க சிம்பு தயாராகிறார் என்றும் பேசப்பட்டது. ஆனால் இதனை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மறுத்துள்ளார். மாநாடு படம் கைவிடப்பட்டதாக வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை, படத்தை கைவிடவில்லை. கதைவிவாதம் மற்றும் முன்தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. படப்பிடிப்பு குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.