சிம்புவுக்கு கல்யாணம் முடிவாயிடிச்சு ஆகஸ்டில் டும்டும்டும் !

தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திருமணங்களில் ஒன்று நடிகர் சிம்புவின் திருமணம். ஏற்கனவே நயன்தாரா, ஹன்சிகா என இரண்டு நடிகைகளை காதலித்து, அக்காதல்கள் தோல்வியில் முடிந்தது ஊர் அறிந்த விஷயம் தான். இந்நிலையில், சிம்புவின் திருமணம் குறித்து புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.தனது உறவுக்காரப் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரும் ஆகஸ்ட் மாதம் சிம்பு திருமணம் நடக்கும் எனக் கூறப்படுகிறது.