சிரஞ்சீவியின் அடுத்த படம் !

அரசியல் காரணமாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த சிரஞ்சீவி, அரசியலில் இருந்து விலகியதும், மீண்டும் தன்னுடைய நடிப்பு பணியின் மீது கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். நடிப்பை மீண்டும் தொடர்ந்ததும் சிரஞ்சீவி ‘கைதி எண்-150’ என்ற படத்தில் நடித்தார். எதிர்பார்த்த வெற்றியை பெற்ற இந்தப் படத்தை அடுத்து,‘சைரா நரசிம்மரெட்டி’ என்ற வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார். ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட ஒரு வீரனின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இந்த நிலையில் சிரஞ்சீவி அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார். தன்னுடைய அடுத்த படத்தை கொரட்டல சிவா இயக்குவார் என்று ஏற்கனவே சிரஞ்சீவி அறிவித்து இருந்தார். இந்த நிலையில் பெயரிடப்படாத அந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.