சிரஞ்சீவி மீடியாவை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

சுரேந்தர் ரெட்டி இயக்க, சிரஞ்சீவி நடிக்கும் புதிய படம் 'சைரா நரசிம்ம ரெட்டி'. இந்த படத்தை சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கிறார். இந்த படம் ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை தழுவி உருவாக்கி வருகிறது. இந்த படத்தை பற்றி தவறான செய்திகள் வெளியாகி வருவதால் மக்கள் மத்தியில் தவறான இமேஜ் உருவாக்கி விடும் என்ற அதிருப்தியில் உள்ளார் அவர். இதனால்  படப்பிடிப்பு முடிந்த பிறகு விரைவில் மீடியாக்களை சந்தித்து படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர திட்டமிட்டுள்ளார்.