Cine Bits
சிறப்பான, தரமான சம்பவத்துடன் மீண்டும் டிடி
விஜய் டிவியில் மீண்டும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் டிடி. விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் முக்கியமானவர் டிடி. அவரது ஜாலியான பேச்சு மற்றும் சுவாரஸ்யமான நிகழ்ச்சித் தொகுப்பால் அவருக்கு ரசிகர்கள் அதிகம். அவர் கடைசியாக விஜய் டிவியில் என்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இப்போது மீண்டும் என்கிட்ட மோதாதே நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மூலம் விஜய் டிவியில் கலக்க வருகிறார் டிடி. ரஜினியின் பேட்ட பட ஸ்டைலில் புரொமோவே வேற லெவலில் செம மாஸாக இருக்கிறது. அதில், சிறப்பான தரமான பன் செய்ய வருவதாக டிடி குறிப்பிட்டுள்ளார்.