Cine Bits
சிறுநீரக கோளாறு சிகிச்சைக்காக அமெரிக்க சென்றார் ராணா !

பாகுபலி படத்தின் மூலம் பாகுபலி புகழ் ராணாவுக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதலில் ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்ற அவர் பின்னர் மும்பையில் சிகிச்சை பெற்றதாகவும் இருப்பினும் பலனில்லை எனவே அவர் சிகிச்சைக்காக தனது தாயாருடன் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பிரச்சனை குறித்து ராணாவோ அவரது குடும்பத்தாரோ இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ஜெர்சி தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கை ராணா தயாரிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.