சிறுவர்களை மையப்படுத்தி மற்றுமொரு படம்

பசங்க, கோலிசோடா காக்கா முட்டை, அப்பா பட வரிசையில் சிறுவர்களை மையப்படுத்தி வெளிவரவிருக்கும் படம் பிழை. காக்கா முட்டை படத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்த ரமேஷ், அப்பா படத்தில் நடித்த நஸத், கோகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களின் அப்பாவாக சார்லீ, மைம் கோபி, ஜார்ஜ் நடிக்கின்றனர். தர்ஷினி, கல்லூரி வினோத் ஆகியோரம் நடித்துள்ளனர். பள்ளிக்கூடம் தொடர்பான கதை களம். அப்பாக்களின் கண்டிப்பு பிடிக்காமல் ஊரைவிட்டு ஓடும் பிள்ளைகள் அவர்கள் சந்திக்கும் அனுபவங்கள் தான் கதையின் மைய கரு. இதன் ஊடாக காதலும் அதனால் ஏற்படும் ஆணவ கொலையும் பற்றி படத்தில் சொல்லப்பட்டுள்ளது.