சிறுவர்களை வைத்து படம் தயாரிப்பது சுலபம்!

டைரக்டர்கள் சிறுவர்களை கதைநாயகர்களாக வைத்து படங்களை இயக்கி வருகிறார்கள்!
சிறுவர்களை கதைநாயகர்களாக வைத்து தயாரித்த ‘கோலி சோடா’ படம் வெற்றிகரமாக ஓடியதால், அதே பாணியில் சிறுவர்களை கதை நாயகர்களாக்கி சில படங்கள் தயாராகி வருகின்றன. இதுபோன்ற கதையுடன் ஏற்கனவே 2 படங்கள் வெளிவந்தன என்றாலும், 2 புதுமுக டைரக்டர்கள் சிறுவர்களை கதைநாயகர்களாக வைத்து படங்களை இயக்கி வருகிறார்கள்! கால்ஷீட் பிரச்சனை இருக்காது. நேரத்துக்கு ஷூட்டிங் முடித்து படத்தை விரைவில் வெளியிடலாம் என்ற நோக்கில் தான் இயக்குனர்கள் அனைவரும் சிறுவர்களை வைத்து படமெடுக்க விரும்புகின்றனர்.