சிலம்பம் கற்கும் சமந்தா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா.அவர் தற்போது  தற்போது விஜய்யுடன் 'தளபதி 61', விஷாலுடன் 'இரும்புத்திரை', விஜய்சேதுபதியுடன் 'அநீதி கதைகள்' மற்றும் ஒருசில தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கின்றார்.

இந்த நிலையில் அவர் தற்போது நடித்து வரும் தெலுங்கு படம் ஒன்றில் சிலம்பம் குறித்த காட்சி வருவதால், படத்தில் இயல்பான சிலம்ப காட்சி இருக்க வேண்டும் என்பதற்காக சிலம்பம் பயின்று வருகிறாராம்.அது குறித்த​ வீடியோவை தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை  ஏற்படுத்தியுள்ளது.