சிலம்பம் கற்றுவருகிறார் சந்தானம் !

காமெடியனாக திரையுலகத்தில் பிசியாக இருக்கும்போது அதை விட்டு விட்டு கதாநாயகனாக மாறி படங்கள் செய்ய ஆரம்பித்தார்.கதாநாயகனாக நடிப்பதற்கு தேவையான அனைத்தையும் கற்றுவருகிறார் சந்தானம். இந்நிலையில் அதர்வா நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, சந்தானம் ஹீரோவாக  நடிக்கும் படத்தை இயக்குகிறார், கண்ணன். தற்போது டகால்டி படத்தில் நடித்து வரும் சந்தானம், அடுத்து இப்படத்தில் நடிக்கிறார். கிராமத்து காதல் கதை கொண்ட முழுநீள காமெடி படம் என்பதால், தற்போது ஸ்டன்ட் இயக்குனர்  ஸ்டன்ட் சில்வாவிடம் சந்தானம் சிலம்பம் கற்றுக்கொள்கிறார்.