சிவகார்த்திகேயனின் அடுத்த படம்!

சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ்.எம் இயக்கத்திலும், ரவிக்குமார் இயக்கத்திலும் பிசியாக நடித்து வருகிறார், இதில் ராஜேஷ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது, படத்தை கோடையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே பாதியில் நிற்கும் ரவிக்குமாரின் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட படத்தை சிவகார்த்திகேயன் விரைவில் முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சிவகார்த்திகேயன் – பி.எஸ்.மித்ரன் இணையும் எஸ்.கே.15 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாவது பாதியில் துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியல் கலந்த த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாகுவதாக கூறப்படுகிறது.