Cine Bits
சிவகார்த்திகேயனின் நடிப்பில் வரும் வேலைக்காரன் பட ஆடியோ ரிலீஸ் எப்போது?

மோகன்ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் படம் 'வேலைக்காரன்'. முதன்முதலாக நயன்தாராவுடன் ஜோடியாக இணைந்திருக்கும் இப்படத்தின் சில புகைப்படங்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. மற்றும் இப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாகவும், அதற்கு அடுத்து இரண்டு நாட்களில் படத்தின் முழு பாடலும் வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. மோகன்ராஜா இயக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில், சினேகா போன்ற பல நடிகர்கள் படத்தில் நடிக்கின்றனர்.