Cine Bits
சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர்!

சீமராஜா திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் எம்.ராஜேஷின் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிவாவின் ஜோடியாகியாக நயன்தாரா. ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைக்கிறார். இந்நிலையில் தற்போது இதன் டைட்டிலோடு சேர்த்து, ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. ’Mr.லோக்கல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் போஸ்டரில் கறுப்பு காஸ்ட்யூமில், கையில் அரை கிளாஸ் டீயுன் ஹாயாக உட்கார்ந்திருக்கிறார் சிவா. தற்போது இந்த போஸ்டர் அவரது ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.