சிவகார்த்திகேயனின் வலியை உணர்ந்து ஆறுதல் கூறிய சிம்பு

நேற்று முன் தினம் நடைபெற்ற 'ரெமோ' படத்தின் நன்றி அறிவிப்பு விழாவில் சிவகார்த்திகேயன் மிக உருக்கமாக பேசியதோடு கண்ணீருடன் தனக்கு பலவிதமான தொல்லைகள் கொடுத்தவர்கள் குறித்து மறைமுகமாக பேசியது அனைவரும் அறிந்ததே.இது குறித்து சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஆறுதலாக​ 'இதற்காக வருத்தப்பட வேண்டாம் சிவா. உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் யார் என்பதை நானும் அறிவேன்.

அவர்கள் கொடுக்கும் தொல்லைகள் ஒரு வகையில் நல்லதே. கடின உழைப்பின் மூலம் அந்த தொல்லைகள் தவிடுபொடியாகிவிடும். எல்லாவற்றையும் கடவுள் பார்த்து கொள்வார், அவரிடம் விட்டுவிடுங்கள்' என்று அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.இதேபோல் சிம்புவும் பல​ பிரட்சனைகளை கடந்து வந்தவர் என்பதால் அந்த​ வலியை உணர்ந்து அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.