சிவகார்த்திகேயனுக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா!

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK-14 படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில் இரும்புத்திரை பட பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும், SK-15 படத்தின் ப்ரீ-புரொடக்‌ஷன் வேலைகளும் இன்னொரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரும்புத்திரை படத்திற்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜாவே தான் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு முதல் முதலாக இசை அமைக்கும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கான பாடல் கம்போசிங் வேலைகளை துவங்கி விட்டார். இந்த தகவலை யுவன் சங்கர் ராஜா நேற்று ஒரு ட்வீட்டின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.