சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகிறார் தியோல்

தமிழில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் விவேக் ஓபராய் வில்லன்களாக நடித்தனர். இவர்களை தொடர்ந்து தற்போது பாலிவுட் நடிகை அபய்தியோல் வில்லனாக அவதாரம் எடுக்க உள்ளார். சிவகார்த்திகேயன் 'இரும்புத்திரை' பட இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடித்து வரும் 'ஹீரோ' படத்தில் வில்லனாக கமிட்டாகியுள்ளார் அபய்தியோல். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்,  சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் அறிமுகமாகவுள்ளார். மேலும் பாலா இயக்கத்தில் 'நாச்சியார்' படத்தில் நடித்த இவனா,  விவேக், யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.