சிவகார்த்திகேயனுடன் இணையும் விவேக் !

பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா, கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இணைந்து தயாரிக்கின்றனர். ஹீரோ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அர்ஜூன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன், இவானா நாயகிகளாக நடிக்கின்றனர்.  இந்த நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காமெடி நடிகர் விவேக் ஒப்பந்தமாகி இருக்கிறார். அவருக்கு இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் மூலம் முதல்முறையாக சிவகார்த்திகேயன் – விவேக் கூட்டணி சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.