சிவகார்த்திகேயன், சந்தானம் இடையே மோதல்!

தமிழ்த் சினிமாவுக்குள் நுழைந்த சந்தானம் நகைச்சுவை நடிகராகவும், சிவகார்த்திகேயன் நாயகனாகவும் வளர்ந்தார்கள். ஒரு கட்டத்தில் நகைச்சுவை நடிப்பு சலித்துப் போன சந்தானம், அவரும் சிவகார்த்திகேயனைப் போல நாயகனாக வளர வேண்டும் என்று ஆசைப்பட்டார். 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படம் மூலம் நாயகனாக உயர்ந்தார். தொடர்ந்து 'இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு' ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார். இதில் 'தில்லுக்கு துட்டு' மட்டும்தான் வெற்றிகரமாக அமைந்தது. அடுத்து வரவிருக்கும் 'சர்வர் சுந்தரம், சக்கப் போடு போடு ராஜா, ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி' என நான்கு படங்களில் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். அதில் பின்னர் ஆரம்பமான 'சக்கப் போடு போடு ராஜா' படம் நாளை வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'வேலைக்காரன்' படமும் நாளை வெளியாவதால் சிவகார்த்திகேயன், சந்தானம் இருவருக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. தற்போது  இருவரில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது நாளை தெரிந்துவிடும்.