சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரபல இயக்குனரின் மகள் !

இரும்புத்திரை' படத்தின்மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர், இயக்குநர் பி.எஸ்.மித்ரன். அவருடைய அடுத்த படம் சிவகார்த்திகேயனுடன் என சமீபத்தில் வெளியிட்டிருந்தார். சமூகத்துக்குத் தேவையான கருத்துடன் த்ரில்லர் ஜானரில் உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, மார்ச் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்துக்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்துவந்த வேளையில், புதுமுக நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் லிஸி தம்பதியரின் மகள் கல்யாணி என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் 15-வது படமாகத் தயாராகும் இப்படத்தை ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் நிறுவனம் மற்றும் 'விஸ்வாசம்' படத்தை விநியோகம் செய்த கே .ஜே. ஆர். ஸ்டூடியோஸ்  நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது.