சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை !

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்துக்கு டாக்டர் என பெயரிடப்பட்டு, கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு கதாநாயகியாக தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து புகழ்பெற்ற பிரியங்கா ஒப்பந்தமாகியுள்ளார். யோகி பாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். படத்திற்கு இசை அனிருத். படம் ஆக்க்ஷன் கலந்த நகைச்சுவை படமாக உருவாகிறது என படக்குழு தெரிவிக்கிறார்கள்.