சிவகார்த்திகேயன் பற்றி பேசும்போது ஜாக்கிரதையாக இருக்கும் சூரி- ஏன் தெரியுமா?

சிவகார்த்திகேயன், சூரி ஒரு படத்தில் இணைகிறார்கள் என்றால் அதில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. அதற்கு உதாரணம் இவர்கள் இணைந்து நடித்த படங்கள் தான். சிவகார்த்திகேயன்- சூரி காமினேஷனில் டைமிங் காமெடிகள் அம்சங்கள் சூப்பராக இருக்கும். ரஜினி முருகன் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதுப்படத்தில் சூரியும் நடிக்கிறார். இந்நிலையில் சூரி, சிவகார்த்திகேயன் பற்றி பேசும்போது, பல்வேறு நாயகர்களோடு நடித்தாலும் சிவகார்த்திகேயனோடு நடிக்கும் போது மட்டும் கவனத்தோடு இருப்பேன். கேமிரா முன்னால் நின்றவுடன் எங்களுக்கு தெரிந்ததை நடித்துக் காட்டி காட்சியை கலகலப்பாக ஆக்கிவிடுவோம். நான் நான்கைந்து காட்சிகளில் முன்னணியில் இருப்பேன். ஆனால், ஒரே ஒரு வசனம் மட்டும் பேசி நான்கைந்து காட்சிக்கான கைதட்டலையும் ஒரே காட்சியில் வாங்கிவிட்டு போய்விடுவார், அவருக்கு அந்த திறமை உண்டு என்றார்.