சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான Mr.Local பட டீஸர்!

மிஸ்டர் லோக்கல் படத்தின் டீஸர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் பரிசாக நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் மிஸ்டர் லோக்கல் படம் வரும் மே மாதம் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டீஸர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. என் பெயர் மனோகர், ஏரியாவில் எல்லோரும் என்னை செல்லமாக மிஸ்டர் லோக்கல் என்று கூப்பிடுவாங்க என்று சிவகார்த்திகேயன் அடித்து சொல்வதுடன் டீஸர் துவங்குகிறது. டீஸரில் நயன்தாராவும், சிவாவும் மோதிக் கொள்கிறார்கள். டீஸர் சுவராஸ்யமாக உள்ளது. ஹீரோ அல்லது ஹீரோயின் ஏதாவது ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருப்பது தற்போது ஃபேஷனாகிவிட்டது. நயன்தாராவும், சிவாவும் டூயட் பாடுவார்கள் என்று எதிர்பார்த்தால் எலியும், பூனையுமாக இருக்கிறார்கள்.