சிவகார்த்திகேயன் மகளுக்கு எந்த நடிகர், நடிகையை பிடிக்கும் தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிபதற்கு முன்பே ஒரு போட்டியாளராக டிவிக்குள் வந்தவர். பின் நிகழ்ச்சி தொகுப்பாளர், டான்ஸர் என வளர்ந்து இன்று சினிமாவில் ஒரு மாஸ் நடிகராகிவிட்டார். தற்போது இவர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கென ஒரு ரசிகர் வட்டாரம் சூழ்ந்துவிட்டது. அவரின் நடிப்பில் அடுத்து வேலைக்காரன் வரும் டிசம்பர் 22ல் வெளியாகவுள்ளது. இதில் நயன்தாராவும் நடித்துள்ளார். பிரபல வானொலி ஒன்றின் நேரலையில் கலந்துகொண்டு, வேலைக்காரன் படம் குறித்து பேசினார். அப்போது அவர் தன் மகள் ஆரத்யாவுக்கு நயன்தாராவை மிகவும் பிடிக்குமாம். டிவியில் அவர் வந்தால் அப்பா என்னோட ஃபேவரைட் ஹீரோ நீங்க, ஹீரோயின் நயன்தாரா என சொல்வாள் என்று வானொலியில் கூறினார்.