சிவகார்த்திகேயன் மீது கைது நடவடிக்கை – வக்கீல்களுடன் ஆலோசனை !

தமிழகத்தில் கடந்த 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தபோது நடிகர் சிவகார்த்திகேயன் தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட சாலிகிராமம் வாக்குச்சாவடியில் ஓட்டு போடுவதற்காக மனைவியுடன் சென்று இருந்தார். ஆனால் வாக்காளர் பட்டியலில் அவரது மனைவி பெயர் இருந்தது. சிவகார்த்திகேயன் பெயர் இல்லை அதன்பிறகு வளசரவாக்கம் வாக்குச்சாவடிக்கு சென்று சிவகார்த்திகேயன் ஓட்டுப்போட்டதாக கூறப்பட்டது. அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத நிலையில் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் ஓட்டு போட்டதற்காக சிவகார்த்திகேயன் மீது கைது நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறது என்று தகவல் பரவி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வக்கீல்களுடன் சிவகார்த்திகேயன் ஆலோசித்து வருகிறார்.