சிவகுமார் குடும்பத்தை தாக்கி பேசிய எஸ்.வி. சேகர்

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். சினிமா மட்டுமின்றி பல விளம்பரங்களிலும் நடிக்கின்றனர். அவர்கள் சில முன்னனி காபி பவுடர் கம்பெனிகளில் விளம்பரங்களிலும் நடிக்கின்றனர். ஆனால் அவர்களின் அப்பா நடிகர் சிவக்குமார் “என் குழந்தைகளா இருந்தா காபி, டீ குடிக்காதீங்க” என ஒரு நிகழ்ச்சியில் அட்வைஸ் கொடுத்துள்ளார். இது பற்றி பிரபல நடிகர் எஸ்வி சேகர் ட்விட்டரில் விமர்சித்துள்ளார். “ஆனா என் குழந்தைகள் காப்பி விளம்பரம் நடிக்கலாம்” என அவர் கிண்டல் செய்துள்ளார். இதனால் எஸ்.வி.சேகருக்கு பலதரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  எஸ்.வி. சேகருக்கு எல்லாத்திலேயும் அவசரம் என்று விமர்சித்துள்ளனர். புதிய கல்வித்திட்டம் நீட்டுக்கு எதிராக பேசிய சூர்யாவுக்கு எதிராக கையில் எடுக்க இதை விட வேறு எதுவும் ஆயுதம் கிடைக்கவில்லை போலும்..அதனால் தான் காபி, டீ விளம்பரத்தில் நடித்ததை தேடிக் கண்டுபிடித்து பேசுகிறார் எஸ்.வி. சேகர் என்று அவரை விளாசியுள்ளனர் நெட்டிசன்கள். சூர்யா மாணவ, மாணவியருக்கு உதவி செய்வது இந்த எஸ்.வி. சேகர் கண்ணுக்கு தெரியவில்லை. கார்த்தி விவசாயிகளை ஊக்குவிப்பதும் அவர் கண்ணில் படவே இல்லை. ஆனால் காபி, டீ விளம்பரம் பற்றி மட்டும் தெரிகிறதோ என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒருவர் செய்யும் நல்லதை பாராட்டாவிட்டாலும், அவர் தொழிலை விமர்சிக்காமல் இருப்பதே நலம் என்று சூர்யா, கார்த்தி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.