சிவப்பு மஞ்சள் பச்சை படம் நான் நடித்ததிலேயே திருப்தியான படம் – சித்தார்த்!!

சித்தார்த், ஜிவி.பிரகாஷ், லிஜோமோல் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதையொட்டி சித்தார்த் அளித்த பேட்டி, நான் நடித்த படங்களிலேயே ரொம்ப திருப்தியான படம். இயக்குனர் சசி அதற்கான சுதந்திரத்தை கொடுத்தார். கமிஷனர் அலுவலகத்தில் பேசும் காட்சி, நைட்டி பற்றிய வசனம் போன்ற முக்கிய காட்சிகளுக்கு நிறைய ஆராய்ச்சி செய்தோம். அந்த அபார உழைப்புக்கு தான் ரசிகர்கள் கைதட்டி மகிழ்கிறார்கள். இயல்பான போலீசை காட்ட திட்டமிட்டோம். அது நடந்து இருக்கிறது. சினிமாவை பார்த்து யாரும் திருந்தவேண்டும் என்று நினைக்கவில்லை. சில விஷயங்களை உணர்த்தினாலே போதும். மக்களின் எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தினாலே போதும். படத்தில் இரண்டு கதாநாயகர்கள் என்று என்னிடம் கூறியபோது படத்தை பொறுத்தவரை கதை தான் முதன்மை. அடுத்து லிஜோமோல் என்ற நடிகை. இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நடிகனே கிடையாது. கதை கேட்கும்போதே தெரிந்துதான் சம்மதித்தேன். படம் நன்றாக வந்தால் போதும் என கூறினார்.