சிவாஜி கணேசன் நடித்த கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன் தொடர்ந்து வசந்த மாளிகை திரைப்படம் டிஜிட்டலில்!

சிவாஜி கணேசன் நடித்த பழைய படங்களான கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகாமியின் செல்வன், ராஜபார்ட் ரங்கதுரை, திருவிளையாடல், பாசமலர் ஆகிய படங்கள் ஏற்கனவே டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தன. இந்த வரிசையில் வசந்தமாளிகை படமும் டிஜிட்டலில் வெளியாகிறது. அதன்பிறகு தமிழில் சிவாஜிகணேசன், வாணிஸ்ரீ நடிக்க வசந்த மாளிகை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது, கே.எஸ்.பிரகாஷ் இயக்கினார். படம் 1972-ல் திரைக்கு வந்து 25 வாரங்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது. இலங்கையிலும் அதிக நாட்கள் ஓடியது. தமிழில் வந்த முதல் காதல் படம் என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள். காதலில் தோல்வி அடைந்தவர்கள் இந்த படத்தை பார்த்தபிறகுதான் தாடி வைக்க தொடங்கினர். வாணிஸ்ரீ கூந்தலும் பெண்கள் மத்தியில் பிரபலமானது.