Cine Bits
‘சிவாஜி கணேசன் மாஸ்டர்; நாம் சீடர்கள்’ – அமிதாப்பச்சன் !

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் முதல் தடவையாக ‘உயர்ந்த மனிதன்’ என்ற தமிழ் படத்தில் நடிக்கிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். தமிழ் வாணன் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கி உள்ளது. அமிதாப்பச்சனும் மற்ற நடிகர்,நடிகைகளும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். அமிதாப்பச்சன் வேட்டி,சட்டையில் வயதான தோற்றத்தில் நடிப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சிவாஜி கணேசன் என்ற மாஸ்டரின் கீழ் அவரது சீடர்களாகிய நானும் சூர்யாவும் உள்ளோம். சிவாஜியின் படத்தை சுவரில் மாட்டி அவருடைய பாதம் தொட்டு வணங்கி நாங்கள் இருவரும் மரியாதை செய்தோம். அவர் மாஸ்டர் நாம் அவருடைய சீடர்கள் என்று பதிவிட்டுள்ளார்.