சீனாவில் தயாராகும் பிரபுதேவாவின் படம்!

பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் 2 படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காததால் அடுத்து அவர் தேவி 2, யங் மங் சங், பொன்மணிகவேல் போன்ற படங்களில் நடித்துவருகிறார். இதில் யங் மங் சங் திரைப்படம் சீனாவில் படமாகிவருகிறது. படத்தை அர்ஜுன்.எம்.எஸ். இயக்கி வருகிறார். இதில் பிரபுதேவா ஜோடியாக லக்‌ஷ்மி மேனனும், வில்லனாக பாகுபலி வில்லன் பிரபாகரும் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரங்களில் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ரா லட்சுமனன், கும்கி அஸ்வின், காளி வெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவை தொடர்ந்து சீனாவில் டெங் லெங் என்ற இடத்தில் அதிக பொருட்செலவில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள். இதில் பிரபுதேவா வில்லன்களுடன் மோதும் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டது. குங்பூ மற்றும் சைனீஸ் சண்டை பற்றிய காட்சிகள் கொண்டு 1980 களில் நடப்பது போன்ற கதையாக யங் மங் சங் உருவாகி வருகிறது. வாசன் விஷுவல் வென்சர்ஸ் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைக்கிறார். குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, பாசில், நிரஞ்சன் படத்தொகுப்பை கவனிக்கின்றனர்.