சீனாவில் ரிலீசாகும் ரஜினியின் 2.௦, ஸ்ரீதேவியின் ‘மாம்’!

இந்திய திரைப்படங்களுக்கு சமீபகாலமாக சீனாவில் அதிக வரவேற்பு உள்ளது. அமீர்கானின் ‘தங்கல்’, ராஜமவுலியின் ‘பாகுபலி’ படங்கள் சீனாவில் அதிக தியேட்டர்களில் ரிலீசாகி வசூலை குவித்தன.
ரஜினிகாந்த் நடிக்க ‌ஷங்கர் இயக்கிய படம் 2.0. இப்படத்தை சீனாவில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. பாலிவுட் ரோபோ 2.0 ரிசர்கென்ஸ் (பாலிவுட் ரோபோ 2.0 வின் எழுச்சி) என படத்துக்கு புதிதாக பெயரிடப்பட்டிருக்கிறது. இந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. தென்னிந்திய சினிமா உலகில் அறிமுகமாகி இந்தி சினிமா உலகிலும் டாப் ஹீரோயினாக இருந்தார். இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த ஸ்ரீதேவி ‘மாம்‘ என்ற படத்தில் நடித்தார். இந்த படம் ஸ்ரீதேவியின் திரையுலக வாழ்க்கையில் 300-வது படம். 2017-ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசியவிருது மாம் படத்திற்காக ஸ்ரீ தேவிக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் வெற்றி பெற்ற மாம் திரைப்படம் சீனாவில் வெளியாக உள்ளது. வரும் 22-ந்தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படம் விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. வரும் 22-ந்தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.